4 நாட்கள் தீபாவளி விடுமுறை எதிரொலி: மது விற்பனை படுஜோர் !
தீபாவளி விடுமுறை தினங்களை முன்னிட்டு, மது விற்பனை படுஜோராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நவம்பர் 5ம் மற்றும் 6ம் தேதி விடுமுறை விடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை என நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் குஷியில் உள்ளனர்.
இந்நிலையில், நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு மது விற்பனை படுஜோராக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
கடந்த 2017ம் ஆண்டில் தீபாவளிக்கு முந்தைய நாளில் ரூ.113 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனையானது. தொடர்ந்து தீபாவளி நாள் மட்டும் ரூ.131 கோடி மதிப்புக்கு மதுபானம் விற்பனை ஆனது.
இதேபோல், 2016ம் ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளில் ரூ.108 கோடிக்கும், தீபாவளியன்று ரூ.135 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.
இதனால், கடந்த இரண்டு நாட்களைவிட இந்தாண்டு தீபாவளி முன்னிட்டு மது விற்பனை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளி விடுமுறையான 4 நாட்களில் ரூ.350 கோடிக்கு மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்று பட்டாசு வெடிக்க தடை விதித்த நீதிமன்றம், உடலுக்கு கேடு விளைவிக்கும் மது விற்பனைக்கு ஒரு தடையை விதிக்கக்கூடாதா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.