மாந்திரீக சக்தி அதிகரிக்க 3 வயது குழந்தை நரபலி! அச்சத்தில் மக்கள்

மர்மமான முறையில் 3வயது பெண் குழந்தை ஷாலினி கடந்த அக்டோபர் 26ம் தேதி கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது.

புதுக்கோட்டை அருகே இலுப்பூர் குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளைசாமியின் 3வயது மகள் ஷாலினி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார், குழந்தையை காணாமல் நீண்ட நேரம் தேடிய பொற்றோர்கள் காட்டுப்பகுதியில் கழுதறுபட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்ந்து அதிர்ச்சி அடைந்தார்கள், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அப்பகுதியை சேர்ந்த பெண் மந்திரவாதியை பிடித்து விசாரித்து வந்தனர் சந்தேகத்தின் அடிப்படையில்.

விசாரணையில் பெண் மந்திரவாதி கூறியது:

மாந்திரீக சக்க்தியை அதிகரிக்க 3 வயது சிறுமியை நரபலி கொடுத்ததாக தெரிவித்தார், சில வரம்புகளுக்கு உட்பட்டு குழந்தையை அதற்காக தேர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.இச்செய்தி அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுதியது. தொடர்ந்து மந்திரவாதி சின்னபொண்ணுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு நாகை அருகே குழந்தையின் எலும்புகள் எரிந்த நிலையில் கோயில் குளத்தின் படிதுறையில் கண்டெடுத்துள்ளார்கள், எனவே இதுபோல மூட நம்பிக்கையை இனி யாரும் செய்யத வகையில் தண்டணை வழங்கவேண்டும், என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளார்கள்.

 

More News >>