எங்கிட்ட இப்போ 10 படம் இருக்கு!

இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் பொங்கலன்று ஸ்கெட்ச் படம் மட்டுமே திரைக்கு வந்தது. ஆனால், தமன்னா தற்போது 10 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் என கலக்கி வந்த தமன்னா, சமீபத்தில் படங்கள் இல்லாமல் கஷ்டப்பட்டார். திரும்பவும் ஐ எம் பேக், என்பது போல, விஸ்வரூபம் எடுத்துள்ளார். தமன்னா, ஏ.எல். விஜய் இயக்கத்தில் தேவி 2, சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே, குயின் படத்தின் ரீமேக்கான தட் இஸ் மகா லட்சுமி உள்ளிட்ட 10 படங்களில் தமன்னா நடித்து வருகிறார்.

விஷாலுடன் இவர் நடித்த கத்திச்சண்டை படம் தோல்வியை தழுவியது. இந்நிலையில், மீண்டும் விஷாலுடன் ஒரு படத்தில் தமன்னா நடிக்கவுள்ளார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக இப்படத்தை தயாரிக்கவுள்ள டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் அடுத்தடுத்த படங்கள் என விஜய் சேதுபதியை தமன்னா ஓவர்டேக் செய்தாலும் செய்வார் என கோலிவுட்டில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

More News >>