உங்க லவ் பிரேக்கப் ஆயிடிச்சா? தயவு செய்து இதமட்டும் செய்யாதிங்க
நோய்களில் மிக கொடுமையான நோய் எதுவென்றால் அது காதல் மட்டுமே. காதல் இல்லாத இடமும் இல்லை, கோவில் இல்லாத இடமும் இல்லை இந்த உலகில். காதல் சுகமானது தான். காதல் என்ற ஒன்று இருக்கும் போது காதல் முறிவு இருக்கதான் செய்யும். ஆமாம் எல்லா காதலர்களும் கணவன் மனைவி ஆவதில்லை.
காதல் முறிவு உங்கள் வாழ்க்கையை அப்படியே திருப்பிப்போட்டுவிடும்.சாகடித்து விடும். உங்கள் வாழ்க்கையையே பாழாக்கிவிடும். இது எல்லாம் பொய்.ஆனால் உண்மை அது இல்லை. காதல் முறிவுக்கு பிறகுதான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். ஆம், ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து தான் காதல் முறிவு நேர்மறையாக அல்லது எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. இந்த காதல் முறிவு ஏற்பட்ட பிறகு, பொதுவாக நாம் அனைவரும் செய்யும் முக்கியமான தவறுகள் இதோ!
மனம் போன போக்கில் டேட்டிங் செல்வது
ஆம், காதல் முறிவால் வாடிவிடாமல் வாழ்க்கையை தொடர ஜாலியான மனிதர்களை சந்தியுங்கள். ஆனால் பழைய உறவை மறக்க மனம் போன போக்கில் டேட்டிங் செல்கிறீர்களா? அப்படியானால் அது கண்டிப்பாக கூடாது. பழைய உறவை பற்றி நினைக்ககூட செய்யாதீர்கள். அது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தி உறவுகளில் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
முடிந்ததை எண்ணி வாழ்வது
அவன்/ அவளை பற்றி நினைப்பது, அவன் / அவள் சொன்னதையெல்லாம் நினைவு கூறுவது. இருவரும் சேர்ந்து செய்தது மற்றும் இருவர் சம்மந்தப்பட்ட விஷேச தருணங்கள் என இவையனைத்தும் நினைப்பது தவறு. இதனால் மன அழுத்தம் அதிகரிக்க செய்யும். மாறாக நிகழ் காலத்தை வாழுங்கள். இல்லை எதிர்காலத்தை பற்றி யோசியுங்கள்.
உங்கள் காதலன் / காதலியை அழைப்பது
உங்கள் காதலன் / காதலியை தொலைபேசி எண் உங்களிடம் இருக்கும். அவளை / அவனை தொடர்பு கொள்ள உங்கள் மனம் தூண்டும். அப்படி ஆகாமல் தடுக்க அவள்/ அவனது தொலைபேசி எண்ணை முதலில் உங்கள் தொலைபேசியில் இருந்து அழித்துவிடுங்கள்.
உறவினர்கள் / நண்பர்களை தவிர்ப்பது
தனிமையில் சில நேரம் கழிப்பதும் நல்ல யோசனைதான். நடந்த தவறைப் பற்றி சிந்திக்கவும், உங்களை நீங்களே புரிந்துக் கொள்ளவும் இந்த தனிமை உங்களுக்கு கை கொடுக்கும். இருப்பினும் நீண்ட நேரம் தனிமையில் இருப்பது ஆபத்து. அது உங்களை மிகவும் தனிமைப்படுத்திவிடும். அதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து நேரத்தை செலவிடுங்கள்.
மது அருந்துதல்
காதல்முறிவு அடுத்து அதனை மறக்க அதிகப்படியான மது அருந்துவது என்பது ஆபத்தில் முடியும். ஆகவே இவ்வகை தீமைகளில் இருந்து ஒதுங்கியே இருங்கள்.
நீங்கள் சந்திக்கும் அடுத்த பெண் / ஆணை காதலிக்க ஆரம்பித்தல்
காதல் முறிவு ஏற்பட்ட பின் மற்றொரு பெண்/ ஆணின் இனிமையான பேச்சுக்கும், மயக்கும் செயலுக்கும், அவர்களின் மீது காதல் பிறக்கலாம். ஆனால் இது செய்யக்கூடாத ஒன்றாகும். மீண்டும் ஒரு முறை காதலில் விழுவது, முக்கியமாக காதல் முறிவு ஏற்பட்ட உடனேயே என்பது செய்யக்கூடாத பெரும் தவறாகும்.
உடலுறவில் ஈடுபடுவது
காதல் முறிவு ஏற்பட்ட காரணத்திற்காக, மனதை ஆற்ற உடனே வேறொரு பெண்ணிடம் உடலுறவு கொள்ளக்கூடாது. காதல் முறிவுக்கு பின் உடல் உறவு கொள்ள துடிப்பதை தவிர்க்கவும். இது உங்கள் மனம் இயல்பு நிலைக்கு மாற அவகாசம் அளிக்கும்.
அவள் / அவன் பேஸ்புக் பக்கத்திற்கு அடிக்கடி செல்வது
அவள் / அவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய, அவளின் / அவனின் பேஸ்புக் பக்கத்திற்கு அடிக்கடி செல்வதும் பெரிய தவறாகும்.
அவன் / அவளின் நெருங்கிய தோழர்களிடம் விசாரிப்பது
ஆம், நீங்கள் காதலித்து கொண்டிருந்த போது, உங்கள் காதலி/ காதலனின் நெருங்கிய தோழர்கள் தான் உங்கள் இருவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்திருப்பார். ஆனால் இன்று அவர்கள் உங்கள் காதலன் / காதலிக்கு மட்டும் நெருங்கிய தோழி/ தோழனாக இருப்பார்கள். அவர்களிடமிருந்தும் விலகியே இருங்கள்.
காதல் முறிவு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல. சொல்லப்போனால் ஒரு புதிய தொடக்கத்திற்கு அது ஒரு ஜன்னலாக கூட விளங்கலாம்.