பகவத் கீதையுடன் பாகிஸ்தான் திரும்பும் சிறைவாசி

இந்தியாவில் பதினாறு ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து பாகிஸ்தான் திரும்பும் சிறைவாசி ஒருவர் தம்முடன் பகவத் கீதையை எடுத்துச் செல்கிறார்.

பாகிஸ்தானின் சிந்து பகுதியை சேர்ந்தவர் ஜலாலுதீன். கடந்த 2001ம் ஆண்டு, உத்தர பிரதேசம் வாரணாசி கண்டோன்மெண்ட் பகுதியில் விமான படை அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமான சில ஆவணங்களுடன் அவர் பிடிபட்டார். கண்டோன்மெண்ட் பகுதியின் வரைபடங்கள் அவரிடம் இருந்ததால் அலுவலக ரகசியங்கள் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் அவருக்குப் பதினாறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நவம்பர் 4, ஞாயிற்றுக்கிழமையன்று ஜலாலுதீன் சிறைத்தண்டனை நிறைவடைந்து வாரணாசி மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறைக்குள் செல்லும்போது பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்திருந்த அவர், இடைநிலை படிப்பை தொடர்ந்து பின்னர் இந்திரா காந்திய தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (IGNOU) பட்ட மேற்படிப்பையும் (எம்.ஏ.,) முடித்துள்ளார். சிறையிலேயே எலெக்டீரியன் பயிற்சியையும் பெற்றுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜலாலுதீனை சிறப்புக் குழுவினர் அமிர்தசரஸுக்கு அழைத்துச் சென்று வாகா - அட்டாரி எல்லையில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளார்கள். பின்னர் ஜலாலுதீன் பாகிஸ்தான் திரும்புவார்.

More News >>