கனடாவில் நடுவானில் விமானங்கள் மோதல்: ஒருவர் பலி
நவம்பர் 4ம் தேதி, ஞாயிறு அதிகாலை கனடாவின் ஒண்டாரியா மாகாணத்தில் நடுவானில் இரு குட்டி விமானங்கள் மோதிக்கொண்டன. அதில் விமானி ஒருவர் பலியானார்.
பைப்பர் பிஏ-42 என்ற விமானம் பறந்து கொண்டிருந்தபோது, கீழேயிருந்து செஸ்னா என்ற சிறு விமானம் மோதியுள்ளது. ஒண்டாரியோ மாகாணத்தின் கார்ப் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தலைநகர் ஒட்டாவாவிலிருந்து ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இந்த விபத்தில் செஸ்னா விமானம் நொறுங்கி விழுந்தது. அதில் விமானி மட்டும் இருந்துள்ளார். அவர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு விமானமான பைப்பர் பிஏ-42, ஒட்டாவா பன்னாட்டு விமான நிலையத்திற்கு திரும்பி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கனடா நாட்டின் போக்குவரத்துத் துறை செய்தியாளர் தெரிவித்துள்ளார்.