கடைசி லைன்தான் ஹைலைட் வித்தியாசமாக திருமண அழைப்பிதழ் அடித்து அசத்திய கோவை மணமகன்!

தற்போது மாறி வரும் நவநாகரிக உலகில் உணவு, உடை, கலச்சாரம் என மாற்றங்களுக்கு பஞ்சமில்லாத நிலையில் தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த திருமண விழாக்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? இன்றைய திருமண அழைப்பிதழ்களின் வடிவமைப்பில் தொடங்கி, வாழ்த்து சொல்வது வரை பெருவாரியான மாற்றங்களை காண முடிகிறது. 

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்சு பவுஜ்தார் (29). என்ற போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் தன்னுடைய திருமண அழைப்பிதழில் போக்குவரத்து விதிமுறைகளை அச்சிட்டு கலக்கினார்.

இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி டிக்கெட்டை போலவே திருமண பத்திரிக்கை அடித்து அசத்தியிருந்தார்.

அண்மையில் கேரளாவை சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ அப்துல் ரஹ்மான் தனது மகளான ரிஷ்வானாவின் திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் விதைகள் நிரம்பிய அழைப்பிதழை அச்சடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார்.

இது ஒரு புறமிருக்க மரியாதைக்கே மரியாதை கொடுக்கும் பேச்சுக்கு சொந்தகாரர்களான கோவை மாநகரை சேர்ந்த மணமகனின் திருமண பத்திரிக்கை ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு காரணம் திருமண பத்திரிக்கையின் கடைசி வரிகள்தான் என்றால் மிகையாகாது.

கோவை குசும்பு என்று கூறும் வகையில் தங்களுக்கே உரித்தான கிண்டலான பாணியில் பத்திரிக்கையின் கடைசியில் குறிப்பு என பதிவிட்டு கடந்த 36 ஆண்டுகளில் நான் தங்கள் இல்லங்களில் பலமுறை சீர்செய்ததோடு, மொய்யும் எழுதி உள்ளேன்.

1980 முதல் இன்றுவரை என் குடும்பத்தில் இதுவே முதல் காரியம் என்பதால் தங்கள் பெற்றுக்கொண்ட சீர் அல்லது மொய்யை கட்டாயம் மொத்தமாக செலுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதை மார்க் செய்த வலைதளவாசிகள் மாப்பிள்ளை விவரமான ஆளுயா. என பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர். இந்த வித்தியாசமான அழைப்பிதழ் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சர்காருக்கு தமிழ் ராக்கர்ஸ் வைத்த செக்!

More News >>