அட்மினுக்கு தீபாவளிக்கு லீவ் கொடுக்கவில்லையா? ஹெச்.ராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்!

தில்லி அரசு தொடர்பான தனது டுவீட்டை பதிவிட்ட சில நிமிடங்களில் ஹெச்.ராஜா நீக்கிவிட்டதால், ஓரு வேலை இது அட்மின் வேலையா இருக்குமோ? என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தில்லியில் அரசின் வரைமுறைகளை மீறி சிறுவன் ஒருவன் பட்டாசு வெடித்ததால், அவனது தந்தை மீது தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இச்செய்தியை குறிப்பிட்டு ஹெச்.ராஜா “பிராமி விஜயன் பாதையில் கெஜ்ரிவால்” என்று ரீடுவிட்  செய்தார்.

இதை கண்ட நெட்டிசன்கள் முதலில் கேரள முதல்வரின் பெயர் பினராயி விஜயன் என்று ட்ரோல் செய்ய தொடங்கினர்.

தில்லி தலைநகராக இருந்தாலும் யூனியன் பிரதேசம் என்பதால் அதன் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இது கூட அறியாத நீங்கள் எப்படி பாஜக தேசிய செயலாளரா உள்ளீர்கள்? என்ற ரீதியில் கேலி செய்து மீம்ஸ்கள் படையெடுக்கத் தொடங்கின.

அடடே தில்லி அரசை விமர்சிப்பதற்கு பதில் மத்திய அரசை அல்லவா விமர்சித்து விட்டோம் என சுதாரித்த ராஜா இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே தனது டுவிட்டை நீக்கினார்.

டுவிட்டை நீக்கிய பின்னும் விடாமல் துரத்திய நெட்டிசன்கள் அட்மினுக்கு சிக்கல் வருமோ என பயந்து டுவிட்டை நீக்கிவிட்டீர்களா? இல்லை தீபாவளிக்கு அட்மினுக்கு லீவு கொடுக்க வில்லையா? என ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர்.

சில மாதங்களுக்கு முன் பெரியார் தொடர்பாக பதிவு செய்த டுவிட்டை உடனடியாக நீக்கிவிட்டு நான் பதிவு செய்யவே இல்லை. என் அட்மின் தான் தவறுதலாக பதிவு செய்துவிட்டார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

 

More News >>