பாவனா வழக்கில் நடிகர் திலீப்பை மாட்ட வைத்த சிப்!
நடிகை பாவனா பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மனைவி காவ்யா மாதவனும் விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
தமிழ் மற்றும் மலையாள நடிகை பாவனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், சூட்டிங் போய் விட்டு திரும்புகையில் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டார். ஓடும் காரிலேயே ஏறி, 4 பேர் அவரை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வீடியோவும் எடுத்தனர். கேரளா முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் என்பவருக்கு மலையாள நடிகர் திலீப் பணம் கொடுத்து, பாவனாவை துன்புறுத்த சொன்னதாக செய்தி வெளியானது. திலீப் இதை மறுத்து வந்தார். இந்நிலையில் திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் நடத்தி வரும் நிறுவனத்தில் இருந்து பாவனா பாலீயல்ரீதியாக துன்புறுத்தப்படும் காட்சிகள் அடங்கிய சிப் கைப்பற்றப்பட்டது. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை முடுக்கி திலீப்பை கைது செய்தன
கேரளத்தைப் பொறுத்த வரை நகைச்சுவை மற்றும் ஆக் ஷன் ஹீரோவாகவும் திலீப் வலம் வந்தார். மலையாள சினிமா சங்கங்களில் ஈடுபாடு கொண்டு சங்கங்களுக்காகப் பல வேலைகளைச் செய்து வந்தார். மலையாள நடிகர் சங்கத்துக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது மலையாளத்தின் முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து 'டுவென்டி டுவென்டி' என்ற படத்தைத் தயாரித்து அதில் கிடைத்த பணத்தை நடிகர் சங்கத்துக்குத் திலீப் வழங்கினார்.
நடிகர் திலீப் முதல் மனைவி மஞ்சுவாரியாரை விவகாரத்து செய்து விட்டே காவ்யா மாதவனை மணந்தார். கடந்த 3 மாங்களுக்கு முன்தான் இந்த திருமணம் நடந்தது. காவ்யா மாதவனுடன் திலீப் கொண்டுள்ள தொடர்பை மஞ்சு வாரியாரிடம் பாவனா கூறியதாகத் தெரிகிறது.நடிகை பாவனாவின் திருமணமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் திலீப் இந்த காரியத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.