கேமரூனில் பதற்றம்: துப்பாக்கி முனையில் பள்ளி முதல்வர், மாணவர்கள் கடத்தல்

கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூன் நாட்டில் தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வற்புறுத்தும் வகையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் இன்று உள்ளே புகுந்தனர்.

அங்கு இருந்த சுமார் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேர் மற்றம் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஓட்டுனர் ஆகியோரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பதுபோன்ற விவரங்கள் தெரியவில்லை என்பதால், 79 பேரின் கதி என்ன என்று அந்நாட்டில் அச்சம் எழுந்துள்ளது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியை கேமரூன் அரசு முடுக்கிவிட்டுள்ளது.

More News >>