2019ம் ஆண்டு முதல் மே 1ம் தேதி பொது விடுமுறை அல்ல: திரிபுரா அரசு
2019ம் ஆண்டு முதல் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை விடப்படாது என்று திரிபுரா அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் மே மாதம் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று உலகம் முழுவதும் உள்ள அனைத்து தொழிலார்களுக்கும் பொது விடுமுறையாக பல்வேறு நாடுகள் அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கொண்டாடப்படும் உழைப்பாளர் தினம் பல நாடுகளில் பொது விடுமுறை தின பட்டியலில் உள்ளது. இந்நிலையில் ஆண்டு தோறும் எந்த எந்த நாட்களில் அரசு விடுமுறை என அந்த அந்த மாநிலங்கள் 2 மாதங்களுக்கு முன்னதாகவே பட்டியலிட்டு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
அப்படி திரிபுரா மாநிலம் வரும் 2019ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தயார் செய்தது. அதில் சர்வதேச உழைப்பாளர் தினத்தை தங்களது அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலதரப்பட்ட ஆர்வலர்கள், தங்களது விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களுக்காக கொண்டாடப்பட்டு வரும் மே தினத்தை பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்காமல் திருத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மாநில பாஜக அரசு உழைக்கும் தொழிலார்களுக்கு எதிராக இப்படி ஒரு அதிர்ச்சியளிக்கும் முடிவை எடுத்துள்ளது. இது தொழிலாளர்களை பாஜக அரசு எப்படி பார்த்துவருகிறது என்றும் நம்மால் உணர முடிகிறது.
இந்தியாவின் எந்த ஒரு மாநிலமும் தொழிலாளர் தினமான மே 1ம் தேதியை பொது பட்டியலில் இருந்து நீக்க வில்லை என்று திரிபுரா மாநில முன்னாள் அமைச்சர் மானிக் டே கூறினார்.