சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் அருகே பெண் போலீசார் பாதுகாப்பு

கடந்த மாதம் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. அன்று முதல் தற்போது வரை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் சித்திரை மாத நடை திறக்கப்பட்டு மூன்று நாட்கள் பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கபட்டது.

இந்த தீர்ப்பு இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களிலும் ஈடுபட்டது.

தீர்ப்பு வந்த சில நாட்களில் ஒரு பெண் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் என இருவர் சபரி மலை கோவில் செல்ல முற்பட்டனர். கடும் எதிர்ப்பை அடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தற்போது, சித்திரை திருநாள் பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இந்த முறையும் போராட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 144 தடை செய்யப்பட்டது.

கமாண்டோ படை, 100 பெண் போலீசார் அடங்கிய மொத்தம் 2300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சபரி மலை வரலாற்றில் முதன்முறையாக ஐயப்பன் சன்னிதானம் அருகே 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More News >>