தரணியெங்கும் விவசாயம் செழிக்கட்டும்:சர்கார் தீபாவளிக்கு ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து!

தீபாவளிக்கு டுவிட்டரில் தமிழில் வாழ்த்து கூறியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது தீபாவளி வாழ்த்தோடு சர்கார் படத்தையும் வாழ்த்தியுள்ளார்.

பல பஞ்சயத்துகளை முடிச்சி அடிச்சி புடிச்சி படத்தை ரிலீஸ் பண்ணா, தமிழ் ராக்கர்ஸ், மெட்ராஸ் ரக்கர்ஸ் இணைந்து அவங்க ஒரு பக்கம் படத்தை ரிலீஸ் பண்ண எது எப்படியோ உண்மையான தளபதி ரசிகர்கள் தியேட்டரில்தான் போய் பார்ப்பார்கள் என்ற ரசிகர்களின் ஏக வசனங்களுக்கு நடுவே படம் பக்க மாஸ் டைட்டிலோடு பட்டைய கிளப்பி வருகிறது.

கார்ப்பரேட் கிரிமினல் பெரிய ஆளா? இல்லை கருவிலேயே கிரிமினல் பெரிய ஆளா? என்ற  அரசியல் யுத்தத்தில் விஜய் அண்ட் கோ ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பாசம் கொண்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது தீபாவளி வாழ்த்தோடு சர்கார் படத்தையும் வாழ்த்தியுள்ளார்.

இது குறித்த தனது டுவிட்டர் பக்கத்தில், “தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே. புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் தீபஒளி ஆனந்தம். செந்தமிழ் தரணியெங்கும் விவசாயம் செழிக்கட்டும், சர்க்கரை தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்”

என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசையின் "சர்கார்" விளம்பரம் ஆரம்பம்!

More News >>