கமலுக்கு கடாரம் கொண்டான் பிறந்தநாள் வாழ்த்து!
விக்ரம் மற்றும் கடாரம் கொண்டான் படக்குழுவினர் கமல்ஹாசனுக்கு வீடியோ வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் நடித்து வருகிறார்.
தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கி, ஜிப்ரான் இசையில் சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் விக்ரமின் 56-வது படமாக வெளிவருகிறது கடாரம் கொண்டான். படத்திற்கு படம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றும் விக்ரம், இப்படத்தில் உடல் முழுவதும் பச்சைகளை குத்திக்கொண்டு, புகை மண்டலம் சூழ, கைவிளங்குடன் மிரட்டல் தோனியில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு கடாரம் கொண்டான் டீம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
உலகநாயகனுக்கு 64 வயசு ஆகிடுச்சு!