கடாரம் கொண்டான் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 56வது படமான கடாரம் கொண்டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது.
நடிகர் விக்ரமின் புதிய படத்தை கமல் தயாரிக்க முடிவு செய்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை தீபாவளியை முன்னிட்டு, நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவரும் படத்தின் தயாரிப்பாளருமான கமல் வெளியிட்டார்.
கடாரம் என்றால் மலேசியா என்று அர்த்தம். ராஜராஜ சோழனுக்கும் திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் மதுராந்தகன். பின்னாளில், ராஜேந்திர சோழனாக இவரது பெயர் மாறியது. கடல் கடந்து பல நாடுகளை வென்ற ராஜேந்திர சோழன், மலேசியாவையும் கைப்பற்றி அங்கு தமிழ் பரவ காரணமானார். இதனால் அவருக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் கிடைத்தது. இந்த படத்திலும் விக்ரம் மலேசியாவில் இருப்பது போலவே படம் உருவாகிறது. அதனால் இந்த படத்திற்கு கடாரம் கொண்டான் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக்கில் WWE சாம்பியன் போல விக்ரம் உள்ளார். ஸ்மோக்கிங் எஃபெக்டில் மலேசியாவின் இரட்டை கோபுரங்கள் உள்ளன. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.