சர்கார் படத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்த ஹெச்.ராஜா!
பல்வேறு தடைகளை தாண்டி தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் உலகம் முழுவதும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
ரேட்டிங்கில் மட்டுமல்லாது, வசூல் பட்டியலில் சரவெடியாக வெடிக்கும் சர்கார் தீபாவளிக்கு காலா, பாகுபலி திரைபடங்களின் வசூல் சாதனையை முறியடித்து முதலிடத்தில் உள்ளது.
வெளிநாடுகளில் 5ம் தேதியே படம் வெளியிடப்பட்டதையடுத்து ரூ.70 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது.
படம் குறித்து தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.
சா்கார் படம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ சர்கார் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், வளர்ந்து வரும் நடிகரான விஜய் இது போன்று நடித்திருப்பது நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாஜகவின் தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தி்ல் நக்கலாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், “படித்ததில் பிடித்தது. கதையைத் திருடுறதுனு முடிவு பண்ணிட்டா, நல்ல கதையா திருடுங்கடா” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சர்கார் படம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை "திரையில் ஆள்வது போல நிஜத்தில் ஆள நினைப்பது மாயை எனவும், களத்தில் பணியாற்றுவது சவாலானது" என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.