ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு! பொங்கலுக்கு ராஜாவா வருவாரா?
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று அறிவிக்கப்பட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு பேசும் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற வசனத்தையே சிம்புவின் புதிய படத்துக்கு தலைப்பாக சுந்தர்.சி வைத்துள்ளார்.
பவண் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான அத்தாரண்டிகி தாரேதி படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்கான இப்படத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமாக உள்ளதால், இதனை வைத்ததாக சுந்தர்.சி விளக்கமளித்துள்ளார்.
லைகா தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களுடன் போட்டியிட உள்ளது.
ரஜினி மற்றும் அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, அவர்களை எதிர்த்து முதல் முறையாக திரைக் களம் காண்கிறார். அதனால், இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.