ருச்சி கார்னர்: வீட்டிலேயே செய்யக்கூடிய லெமன் ஐஸ் டீ
அனைவருக்கும் பிடித்த லெமன் ஐஸ் டீ வீட்டில் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தேயிலைத்தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - 2
புதினா இலைகள் - சிறிது
ஐஸ் கட்டிகள் - 1 டம்ளர்
செய்முறை:
இரண்டு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் தேயிலைத் தூளைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளுங்கள்.
ஒரு எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
மற்றொரு எலுமிச்சை பழத்தை மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
தேநீரில் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
கண்ணாடி டம்ளரில் ஐஸ் துண்டுகளைக் கால் பகுதி வரை நிரப்புங்கள்.
இதில் அரை டம்ளர் அளவுக்கு தேநீரை சேருங்கள்.
பிறகு கால் டம்ளர் தண்ணீரை ஊற்றுங்கள்.
நறுக்கிய எலுமிச்சைத் துண்டுகளையும், புதினா இலைகளையும் போட்டு, ஜில்லென்று பரிமாறுங்கள்.