சர்கார் மாதிரி மாற்றம் நடந்தா நல்லா இருக்கும்: பிரபல இயக்குநர் டுவிட்!

சர்கார் படம் போல அரசியலிலும் மாற்றம் நடந்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் சுசீந்திரன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் சர்கார் படம் போல அரசியலிலும் இது போன்ற ஒரு மாற்றம் நிகழாதா என்ற என்ற ஏக்கத்தை பொதுமக்கள் மத்தியில் விதைத்துள்ளது. அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும் படமாக சார்கார் எடுக்கப்பட்டுள்ளது. 

படத்தை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இயக்குநர்கள், அரசியல்வாதிகள், நடிகை, நடிகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது சர்கார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரபல இயக்குநர் சுசீந்திரன்,

ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் சர்கார் மிகச்சிறந்த அரசியல் திரைப்படம். தளபதியின் நடிப்பும்,இயக்குநரின் திரைக்கதையும் மிக நேர்த்தி. ஹாட்ரிக் வெற்றிக்கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.

இந்த மாதிரியான அரசியல் மாற்றம் நடந்தால் நல்லா இருக்கும் என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 

You May Like:

'சர்கார்' படத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்த ஹெச்.ராஜா!

தரணியெங்கும் விவசாயம் செழிக்கட்டும்:'சர்கார் தீபாவளிக்கு' ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து!

50 கோடி ரூபாயை கடந்த சர்கார் முதல் நாள் வசூல்!

More News >>