ஐ லவ் யூ கமல் பம் சிக்கு.. பம் சிக்கு... நியூஜெர்சியில் இருந்து பறந்து வந்த கடிதம்!

நியூஜெர்சியில் கிண்டர்கார்டன் பயிலும் குழந்தை ஒன்று தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவிதமான ஆடம்பரமும் இன்றி பிறருக்கு உதவி செய்வதாக எனது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கமல் விடுத்த வேண்டுகோளையடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ரசிகர்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

காலை முதலே பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது பிறந்தநாளையடுத்து கவிதை ஒன்றை வெளியிட்ட கமல்ஹாசன் அதில் உறுப்புதானம் பற்றி வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே, நியூஜெர்சியை சேர்ந்த கிண்டர்கார்டன் பயிலும் குழந்தை ஒன்று கமல்ஹாசனுக்கு தனக்கே உரிய பாணியில் கடிதத்தை ஒன்றை அனுப்பியுள்ளது.

மயூரி என்ற அந்தக் குழந்தை எழுதியுள்ள கடிதத்தில்,

கமல் அங்கிள் நீங்க எப்படி இருக்கீங்க, நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில தொடர்ந்து உங்களை பார்ப்பேன். எனக்கு நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தநாள் உங்களுக்கும் அன்று தான் பிறந்தநாள் என்று என் அப்பா கூறினார். உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஐ லவ் யூ எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களது 'பம் சிக்கு.. பம் சிக்கு...' பாடல் ரொம்ப பிடிக்கும். ஐ ல்வ யூ. இப்படிக்கு மயூரி சுந்தர் ராமன், கிண்டர்கார்டன். இவ்வாறு தனது குழந்தை மொழியில் கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்தக்கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

More News >>