தீபாவளி பண்டிகையை கௌரவித்த ஐநா: சிறப்பு தபால் தலை வெளியீடு
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஐநா சபை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா. இந்தியர்களின் முதன்மையான பண்டிகையான தீபாவளியை அமெரிக்கா அரசின் சார்பில் கொண்டாட முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா துவங்கி வைத்தார். இந்திய முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் முக்கிய விருந்து நிகழ்ச்சியாக கொண்டாடபட்டு வருகிறது.
மேலும் கடந்த 2016ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் தீபாவளி முன்னிட்டு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான்.கி.மூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் ஐ.நா. சபை சார்பாக தபால் தலை ஒன்றை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்காவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தியாவின் முக்கிய நபர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது அதற்கு பலனாக, இந்தியாவில் 95% பேர் கொண்டாடும் தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக தீபங்களுடன் கூடிய தபால் தலையை வெளியிட்டு ஐ.நா. சபை அங்கீகாரம் அளித்துள்ளது. தபால் தலையின் விலை அமெரிக்கா மதிப்பில் 1 டாலர் 15 சென்ட் என் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.