அரபு நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்கள்: இதுவரை 24 ஆயிரம் பேர் பலி
வெளிநாடுகளில் பணிபுரிவோர் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்றால் அது மறுக்க முடியாத ஒன்று. இந்தியர்கள் பணி புரியாத நாடுகளே இல்லை. பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவூதி, அரபு நாடுகளில் லட்ச கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மனித உரிமைகள் மற்றும் பொது நல அமைப்பில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர்.
அரேபிய நாடுகளில் பணிபுரிந்து வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் கடந்த 6 மாதங்களில் பல்வேறு இன்னல்கள் தாங்காமல் தினமும் சுமார் 10 இந்தியர்கள் மரணம் அடைந்து வருகின்றனர்.
பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இது தொடர்பாக விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டது மனித உரிமைகள் மற்றும் பொது நல அமைப்பு. 2012ம் ஆண்டு முதல் இன்று வரை வெளிநாடுகளில் மரணமடைந்த இந்தியர்கள் பற்றிய தகவல்களையும் கேட்டது.
மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் விவரங்களை அந்த அந்த இந்திய தூதரகங்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வெளிநாடுகளுக்கு வேளைக்கு சென்று பணிபுரிந்து மரணமடைந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 410 பில்லியன் அமெரிக்கா டாலர் வசூலிக்கப்பட்டது. அதில் அரேபிய நாடுகளில் மட்டும் சுமார் 209 பில்லியன் அமெரிக்கா டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை மற்றும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களின் புள்ளி விவரப்படி இது நாள் வரை சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை அடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 10 இந்தியர்கள் மரணமடைந்துள்ளார்கள் என்று கணக்கிட பட்டுள்ளது.