முன்னேற்றத்திற்கான வழிகள்!
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தெரிந்துகொள்ள வேண்டிய சில் வழிமுறைகள்.
செவிடாக இருந்துவிடுங்கள்:
ஏதையும் பொருட்படுத்டாதீர்கள் , உங்களைப்பற்றி மட்டமாகவோ, அவதூறாகவோ யார் பேசினாலும் அதை கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுங்கள், ஏதிரிகள் ஏமாந்து விடுவார்கள், செவிட்டு தவளை வெற்றிப் பெற்ற கதையை நினைத்துக்கொள்ளுங்கள், நமது வாழ்க்கையில் வெற்றி பெற பல இடங்களில் செவிடாக இருப்பதே நல்லது.
அலட்சியம் செய்யுங்கள்:
உங்களை ஏதிரியாக நினைப்பவர்களை அலட்சியம் செய்யுங்கள், உங்களுக்கு பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டாம் அதனால் கோபமும் டென்சனும்தான் அதிகரிக்கும்,
ஏதிர்மறை எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்:
உங்களை குறைவாக நினைத்துக்கொள்ளும் ஏதிர்மறை எண்ணங்களை தூக்கி ஏறியுங்கள் மேலும் பிடிக்காத செயல்கள் மற்றும் நபர்களைப் பற்றி எண்ணங்களை, உதறித்தள்ளுங்கள்.
இறுதியானது ஆனால் மிகவும் முக்கியமானது முதலில் நம்முடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அதற்காக கோபமே படாமல் இருந்தால் நம்மை மண் என்று சொல்லிவிடுவார்கள், அதனால் தேவைப்படும் இடத்தில் வரம்போடு கோபம் கொள்வது தவறு இல்லை.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இது போல சிறு சிறு விஷயங்களுடன் நம்முடைய வேலைகளை செய்தால் போதுமானது.