குடிபோதையில் 18 வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞரால் பரபரப்பு
டெல்லியில் குடிபோதையில் 18 வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தெற்கு டெல்லியில் உள்ள மடாங்கிர் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென கண்ணில் தென்பட்ட வாகனங்களின் பெட்ரோல் குழாய்களை எடுத்து தீயித்து கொளுத்தினார்.
தீ மளமளவென எரிந்ததால், அருகில் நின்றிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுடன் விரைந்த போலீசார் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், வாகனங்களை தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிய இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர், போலீசார் இளைஞரிடம் நடத்திய விசாரணையில் குடியோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்தில், மொத்தம் 8 இருசக்கர வாகனங்களும், 2 காரும் முற்றிலுமாக எரிந்துள்ளது என்றும், 6 இருசக்கர வாகனங்களும் 2 காரும் லேசான அளவு தீக்கு இரையானதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.