பேண்ட் போட மறந்துட்டீங்களா? என கேட்டவருக்கு அமலாபால் பதிலடி!
கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் நடிகைகள் அவ்வப்போது வெளியிடுவது வழக்கமான ஒரு விசயம். அதற்கு கமெண்டுகளும் மிகவும் மோசமாகவும், ஆபாசமாகவும் வருவது வாடிக்கை.
இந்நிலையில், டாப் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து படகு ஓட்டும் புகைப்படத்தை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இதற்கு எக்கச்சக்க லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்தன.
அதில் ஒரு நெட்டிசன், பேண்ட் போட மறந்துட்டீங்களா? என கேட்டதற்கு ‘பேண்ட் இப்பதான் ஜாகிங் போயிருக்கு’ என அமலாபால் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் சுசிகணேசன் மீது சரமாரியாக மீடூ புகார்களை வைத்த அமலாபால், அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் எடுக்காமல் பழையபடி படப்பிடிப்புகளில் ஆர்வம் காட்ட துவங்கி விட்டார்.