கூவம் ஆற்றின் பாலத்தடியில் கண்டெடுக்கப்பட்ட வாலிபர் சடலம்!
நேற்று(7.11.2018) மதியம் சென்னை மயிலப்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் பாலத்தடியில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது, இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த மன்னா, என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் பாசறையில் வட்ட அமைப்பாளராக இருந்து வந்தார், கடந்த மூன்று தினங்களாக இவரைக்காணாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில், நேற்று மதியம் அவரது உடல் மயிலப்பூர் மீனாம்பாள்புரம் கூவத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அவரது மரணம் கொலையா அல்லது போதையில் தவறி விழுந்து உயிரிழந்தார என்ற கோணத்துல் விசாரணை நடத்தி வருகின்றார்கள்
கூவத்தின் கரையில் அப்பகுதியை சேர்ந்த பலர் மது அருந்திவிட்டுச் செல்வதும், சண்டைப்போடுவதும் வழக்கமான ஒன்று என அப்பகுதி மக்கள் கூறினார்கள்.