2 நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த சர்கார்!
தீபாவளியன்று வெளியான விஜய்யின் சர்கார் திரைப்படம் 2 நாட்களில் 110 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், கரு. பழனியப்பா, ராதாரவி, யோகிபாபு என பலர் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் இரண்டே நாட்களில் 110 கோடி ரூபாய் வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. சர்கார் படம் விஜய்யின் 6வது 100 கோடி கிளப் படம் என பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
தீபாவளியன்று சர்கார் படத்தின் தமிழ்நாட்டு வசூல் 32 கோடி என்றும், நொறுக்குத் தீணிகள் விற்பனையை சேர்ந்து 50 கோடியை கடந்ததாகவும் பாஃப்டா நிறுவனர் தனஞ்செயன் தெரிவித்தார். இந்நிலையில், சினிமா வர்த்தக ஆய்வாளரான சுமித் கேடல், இரண்டாம் நாள் வசூல் 110 கோடியை தாண்டி சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றுள்ளார்.
சர்கார் படம் உலகம் முழுவதும் 3200 திரைகளில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்து வருகிரது. செவ்வாயன்று வெளியான சர்கார் வரும் ஞாயிறு வரை அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஃபுல் புக்கிங் ஆகியுள்ளது.
மெர்சல் படத்தின் 300 கோடி ரூபாய் வசூல் சாதனையை சர்கார் இதே வேகத்தில் சென்றால் முதல் வாரத்திலேயே முறியடிக்கும் என கணித்துள்ளனர்.