ஹவுரா விரைவு ரயிலில் நெல்லை கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!

நெல்லை மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டவர்கள் இசக்கி, கர்ப்பிணி சுவர்ணலதா(26) தமபதியினர். இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

தீபாவளியை யடுத்து நிறைமாத கர்ப்பிணியான சுவர்ணலதா தனது கணவருடன் நெல்லை திரும்ப முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த 6ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து ஹவுரா - கன்னியாகுமரி விரைவு ரயிலில் ஏறி நெல்லை வந்துள்ளனர்.

ஹவுரா விரைவு ரயில் சென்னை பீச் ஸ்டேஷன் அருகே வருகையில் சுவர்ணலதாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும், எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அப்பலோ மருத்துவ உதவி மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மருத்துவர்களோடு, எழும்பூர் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்துள்ளனர்.

சரியாக இரவு 7.55க்கு சென்னை எழும்பூர் வந்ததடைந்த ரயிலில் இருந்த பயணிகள் கிழே இறங்கிய நிலையில், சுவர்ணலதாவிற்கு பிரசவ வலி அதிகமாகவே ரயிலின் உள்ளே மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில் சுவர்ணலதாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த சக பயணிகள் கைதட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

மேலும், துரித முயற்சி மேற்கொண்ட மருத்துவக் குழுவினருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

நிறைமாத கர்ப்பிணிக்கு உதவி செய்ய பரிசலில் வந்த 108

வலி இல்லாமல் சுகப்பிரசவம் கொடுக்கும் முடக்கத்தான்

More News >>