பில்லா பாண்டி விமர்சனம்!
சர்கார் படத்துக்கு போட்டியாக அஜித்தின் விஸ்வாசம் ரிலீசாகவில்லை. ஆனால், அதற்கு பதிலாக அஜித் ரசிகரின் பில்லா பாண்டி ரிலீசாகியுள்ளது. படம் தேறிச்சா தேறலையா என பார்ப்போம்.
தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் பில்லா பாண்டி படத்தின் மூலம் ஹீரோவாக அப்டேட் ஆகியிருக்கிறார். முயன்றவரை நன்றாக நடிக்க முயற்சியும் செய்துள்ளார். ஆனால் அவரது முகத்தில் ஹீரோவுக்கு பதிலாக வில்லன் கலை தான் ஓடுகிறது.
அஜித்தை மட்டுமே நம்பி ஒரு படத்தை எடுத்துவிட முடியுமா என்றால்? அந்த படம் நிச்சயம் வெற்றி பெறாது. இந்த படத்தில் தீவிர அஜித் ரசிகராக அஜித்தை பூஜை அறையில் வைத்தே சாமி கும்பிடும் அளவுக்கு ஆர்.கே. சுரேஷ் தனது விஸ்வாசத்தை காட்டுகிறார். ஆனால், கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் இது அஜித் ரசிகர்களுக்கே போர் அடித்து விடுகிறது.
மாமன் பொண்ணு சாந்தினியை பில்லா பாண்டி காதலிக்கிறார். ஆனால், இது மாமனுக்கு பிடிக்கவில்லை. வெளியூருக்கு கட்டிட வேலைக்கு செல்லும் பில்லா பாண்டியை இந்துஜா ஒரு தலையாக காதலிக்கிறார். இந்த விஷயம் அவரது தந்தைக்கு தெரியவர, பில்லா பாண்டியை ஆள் வைத்து அடித்து விரட்டுகின்றனர்.
மீண்டும் பில்லா பாண்டி ஊருக்கு சென்றாரா? யாரை கைப்பிடித்தார் என்பதே மீந்துப் போன பழைய கதை.வித்தார்த் மற்றும் சூரியின் கெஸ்ட் அப்பியரன்ஸ் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இந்துஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மொத்தத்தில் பில்லா பாண்டி ஒரு முறை பார்க்கும் படமாக அமைந்த விதத்தில் பாராட்டுக்களை பெறுகிறது.
பில்லா பாண்டிக்கு மார்க்: 2.25/5.