சர்கார் படம் பார்த்த மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?
சர்கார் படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, சர்கார் படம் திருப்திகரமாக உள்ளது என்றார்.
விஜய்யின் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. படத்திற்கு இப்போதுதான் அதிமுக வட்டாரத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காரணம் படத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு வைக்கப்பட்ட பெயர் தான். கோமளவல்லி எனும் ஜெயலலிதாவின் இயற்பெயரை ஏ.ஆர். முருகதாஸ் வைத்து, அதிமுகவை மறைமுகமாக தாக்கியுள்ளார்.
இதனையறிந்த கடம்பூர் ராஜூ படத்திற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். எச். ராஜாவோ நல்ல கதையா திருடி எடுத்திருக்கலாமே என கலாய்த்துள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்த மகேஷ்பாபு, சர்கார் படம் சிறந்த அரசியல் படமாக விளங்குகிறது. திருப்திகரமாக இருந்தது. முழுவதும் ரசித்துப் பார்த்தேன் என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.