தீபாவளி இப்படியா கொண்டாடுவிங்க? குழந்தையின் வாயில் அணுகுண்டை வைத்த இளைஞர்
தீபாவளி என்றாலே சந்தோஷம்தான் அதே சமயம் அங்காங்கே வெடி விபத்து என செய்திகளில் படிக்கும் போது ஜாக்கிரதையாக இருந்து இருக்களாமே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் மீரட்டில் நடந்ததோ சைக்கோதனமான கொடுமை.
ஆனால் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே இளைஞர் ஒருவர் 3 வயது பெண் குழந்தையின் வாயில் அணுகுண்டை வைத்து வெடித்துள்ளார், அந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
மீரட் அருகேயுள்ள மிலக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஷி குமாரின் மகள் தீபாவளி அன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஹர்பால் என்ற இளைஞர் குழந்தையின் வாயில் அணுகுண்டை வைத்து வெடிக்கச் செய்துள்ளார். அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.