மதுரையில் இருந்து ராமாயண யாத்திரை சுற்றுலா ரயில் ஏற்பாடு: ஐஆர்சிடிசி

ராமாயண யாத்திரை என்ற பெயரில் மதுரையில் இருந்து சீதை பிறந்த இடமான நேபாளம் வரை செல்லும் யாத்திரீக ரயில் பயணம் நவம்பர் 14ந் தேதி துவங்க உள்ளது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை, ஹம்பி, நாசிக், அயோத்யா நந்திக்ராம் வழியாக செல்லும் இந்த ரயிலின் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.15ஆயிரத்து 830 ஆகும்.

15 நாட்கள் யாத்திரை மீண்டும் ராமேஸ்வரம் வழியாக மதுரை வந்தடையும். மேலும், மதுரையில் இருந்து கோவை வரை செல்லும் சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. டிசம்பர் மாதம் 2ன் தேதி புறப்படும் அந்த சுற்றுலா ரயில் ஐதராபாத், அஜந்தா, எல்லோரா, மும்பை வழியாக கோவா சென்றடையும்.

கோவா சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.10 ஆயிரத்து 100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட இந்த பயண நாட்கள் 10 ஆகும். மேலும், 5 நாட்கள் சுற்றுலா பயண திட்டத்திற்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 725 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே நாளில் சுற்றுலா ரயில் ஒன்று சென்னை எழும்பூர் வழியாக கொல்லூர், மூகாம்பிகை, சிருங்கேரி சாரதா பீடம், தர்மசாலா மஞ்சுநாதர் மற்றும் குக்கே சுப்ரமணியா கோவில்கள் உள்ளிட்ட இடங்களை பார்வையிடலாம் . 5 நாட்கள் பயண காலம் கொண்ட இந்த ரயிலில் சுற்றுலா செல்ல நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரத்து 930 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு சைவ உணவுகள், தங்கும் இடம், சுற்றி பார்க்க வாகன வசதியும் செய்து தரப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி. கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் கூறினார்.

More News >>