இந்த 7 விஷயங்களை கடைப்பிடித்தால் போதும் வெற்றி நிச்சயம்.
நமது அன்றாட வாழ்வில் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படுகிறோம், அன்றாட வாழ்வு மிகவும் பரபரப்பனது, இந்த சூழ்நிலையில் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கான நேரம் ஒதுக்கக் கூட முடிவதில்லை. இந்த பரபரப்பான வாழ்க்கையின் இடையிலும் வெற்றி பெறும் சில மனிதர்களும் இருக்கின்றார்கள் அதற்கான காரணம் அவர்கள் நேரத்தை திறமையாக தெளிவாக நிர்வகிக்கின்றனர், அதில் தான் அவர்களது வெற்றியும் இருக்கிறது.
காலை நேரத்தை உனதாக்கு:
அதிகாலை எவ்வளவு சீக்கிரதில் பறவை இரை தேடச் செல்லுமோ அந்த பறவைக்கே உணவு கிடைக்கும் என்கிற பழமொழியை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும். வெற்றி பெற்ற பலர் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து தங்களுடய அன்றைய நாளை தொடங்குகின்றனர். சிலர் சொல்லுவார்கள் "நான் நைட் எவ்வளவு நேரம் ஆனாலும் தூங்காமல் வேலை செய்வேன் ஆனால் காலையில சீக்கிரம் எழுவது கஷ்டம் என்று" ஆனால் இது தவறு ஒரு ஒருவாரம் அதிகலை எழுந்துப் பாருங்கள் அதிகாலை எழுவதால் உங்களுக்கான நேரம் அதிகமாக கிடைக்கும் முதலில் கடினமாக இருந்தாலும் அந்த காலையின் புத்துணர்சியை உணர தொடங்கிவிட்டால் உங்களுக்கு அலாரமே தேவை இருக்காது. வெற்றி பெற்ற மனிதர்கள் தங்களுடைய வேலைகளை ஒருபோதும் நாளை என்று ஒத்தி வைப்பதில்லை.
காலை 8 மணிக்குள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
உடற்பயிற்சி :
உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் சுவர் இருந்தால் தான் சித்திரம் வைரய முடியும் எனவே நீங்கள் நலமாக இருப்பது முக்கியம் அதனால் காலை 4.30 அல்லது 5 மணிக்கு எழுந்து தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் , காலை உடற்பயிற்சி அந்த நால் முழுவதும் உஙளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
காலையில் எழுந்தவுடம் உங்கள் மொபைல் போனை எடுக்கவேண்டாம் (அவசர தேவைக்கு தவிர) உங்களுடைய வழக்கமான காலைப் பணிகளை தொடங்குங்கள்.வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள் வெற்றி பெற்ற மக்கள் தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் படிக்கின்றனர், எப்பொழுதும் கற்றுக்கொள்ள மறக்க வேண்டாம், உங்கள் தொழில், படிப்பு அல்லது உங்களுக்கு விருப்பமான துறையில் புதிது புதிதாக கற்றுக்கொள்ளுங்கள்.
"கற்றது கைமண் அளவு கல்லாது உலகளவு" என்ற அவ்வையின் அறிவுரை மனதில் எப்பொழுதும் இருக்கட்டும்
காலை உணவை தவிர்க்காதீர்கள் ஆரோக்கியமான உணவு,உங்களுடைய காலை உணவை ஒரு பொழுதும் தவிர்க்காதீர்கள். நேரம்தான் வாழ்க்கை, வாழ்க்கைதான் நேரம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள், நேரத்தை யாராலும் சேமித்து வைக்கமுடியாது ஆனால் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.