டிசம்பரில் வருகிறான் சிலுக்குவார்பட்டி சிங்கம் !

வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி விஷ்ணு விஷாலின் சிலுக்குவார் பட்டி சிங்கம் திரைப்படம் ரிலீசாகிறது.

முண்டாசுப்பட்டி ராம் குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ராட்சசன் திரைப்படம், விஷ்ணு விஷாலின் கேரியரிலேயே சிறந்த படம் என்ற பெயரை எடுத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், விஷ்ணு விஷாலின் நடிப்பில் காமெடி படமாக உருவாகியுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியாகும் என படக்குழு தற்போது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை செல்லா அய்யாவு என்ற அறிமுக இயக்குநர் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தையும் விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இதில் நாயகியாக ரெஜினா கஸாண்ட்ரா நடித்துள்ளார். ஒரு குத்து பாடலுக்கு பிக்பாஸ் புகழ் ஓவியா நடனமாடியுள்ளார். யோகிபாபு காமெடியில் கலக்கவுள்ளார். இந்த படத்திலும் விஷ்ணு விஷால் போலீஸ் கெட்டப்பில் வருகிறார்.

More News >>