சுறாவில் சுண்டலாகி மெர்சலில் மெண்டலான- விஜய் மீது நமது அம்மா தாக்கு

சர்கார் திரைப்படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் இலவச திட்டங்களையும் விமர்சித்திருப்பதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா கடுமையாக தாக்கி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்கார் திரைப்படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இதனிடையே நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான “நமது அம்மா” நாளேடு கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளது:

கோடிச்சிங்கத்தின்தைரியம்குடியிருக்கும்

வீரத்திருமகளின்

திவ்யப்பிரபந்த

திருவாய்மொழிதிருப்பெயரையும்

அந்ததெய்வீகத்தாயின்

கனவுளத்திட்டங்களையும்

மலிவாகசித்தரித்து

கதைத்திருடன்கள்ளக்குறிச்சிமுருகதாஸ்படம் இயக்கம்

இதற்கு

காசு பணம்முதலீடோ

கேபிள்திருடன்களான

கேடி பிரதர்ஸ்என்றிருக்க

சுறாவில்சுண்டலாகிமெர்சலில் மெண்டலான

அதி மேதாவிவிஜய்

அஇஅதிமுகஎன்னும்

ஆலவிருட்சஇயக்கத்தையும்

அதன்ஆக்ஸிஜனானஅம்மாவையும்

வங்கத்துகடலோரம்உறங்குகிறசிங்கத்தாய்வந்தெழுந்துவிடமாட்டார்என்னும்நம்பிக்கையில்

வம்புக்குஇழுத்து

வாய்ச்சவடால்அடித்திருக்கிறார்

மேடும் பள்ளமும்மேல் மட்டமும்கீழ்ம்ட்டமும் என

பெருகிக்கிடக்கிறபொருளாதாரஏற்றத்தாழ்வை

சமன்படுத்திசீர் செய்ய

எல்லாரும்எல்லாமும்பெறவேண்டும்என்னும்

உற்றநிலைஉருவாக்க

உளமார்ந்தநல்எண்ணத்தால்

கழக அரசுவகுத்திட்டகருணை மனத்திட்டங்களை

இலவசம்என்னும்ஒற்றைச்சொல்லால்

இழிவு செய்யமுனைந்திருக்கு

அழிவுக்குகாத்திருக்கும்அக்கிரமக்கும்பல் ஒன்று

அம்மி குழவிகல்லுகளோடு

மல்லுக்கட்டியகாலத்திலிருந்து

நம்குலப் பெண்களுக்கு

மிக்சி - கிரைண்டர்ஃபேன் தந்துஅவர்களை

விஞ்ஞானயுகத்திற்குஅழைத்து வந்தும்

மச்சு வீட்டுப்பிள்ளையின்மடி கிடக்கும்மடிக் கணினி

குச்சு வீட்டுப்பிள்ளைக்கும்கிடைத்திடவே

உள்ளங்கைக்குள்உலகத்தைஅள்ளித் தந்ததும்

இடை நிற்றல்இல்லா கல்விக்கு

மிதிவண்டிசீருடைகள்காலணிகள்கணிதஉபகரணங்கள்

எல்லாமும்தந்து

கல்விஒருவருக்குகிடைக்கப்பெற்றால்

அவர்எல்லாமும்பெற்றவராவார்என்னும்

சமூகநீதிமலரவே

தொண்டாற்றும்தூய நல்இயக்கத்தை

சனங்களெல்லாம்கொண்டாடிவாழ்த்தும் போது

சர்கார்எனும் பேரில்படம் நடித்து

வருமானவரித்திருடன் அதைவசைபாடிதிட்டலாமோ

வெட்கம்வெட்கம்...

More News >>