சர்கார் பிரச்சனையில் கைது செய்யப்படுவாரா விஜய்?

சர்கார் பட பிரச்சனை இன்னும் குறையவில்லை ஏ.ஆர் முருகதாசை போலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் வெளியானலும் சர்ச்சைகள் குறையவில்லை, அதிமுக மற்றும் திமுக-வை நேரடியாகவே விமர்சித்து பல காட்சிகள் இடம்பெற்றுள்ளது, அதிலும் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என்று பெயரை வில்லிக்கு வைத்தும், அரசு இலவசங்களுக்கு எதிராக அனல் பறக்கும் வசனம் பேசுகின்றார் நடிகர் விஜய், இதனை பார்த்து கொந்தளித்த அதிமுக அமைச்சர்கள் படத்திற்கு ஏதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

மேலும் ஒரு பாடல் காட்சியில் இயக்குனர் முருகதாஸ் வீட்டில் உள்ள இலவச பொருட்களான கிரைன்டர், மிக்சியை துக்கி போட்டு கொளுத்துவது போன்ற காட்சி இடம்பெற்று அதிமுகவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது இந்த காட்சிக்கு தான். இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார், இந்த செயல் மக்களை வன்முறைக்கு தூண்டிவிடுவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் வன்முறையை தூண்டும் வகையில் படம் எடுத்த முருகதாஸ் மற்றும் விஜய் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று சென்னையில் தலைமை வழக்கறிஞர் விஜய நாரயணனுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பிறகு வன்முறை தூண்டும் வகையில் காட்சிகளை வைத்த இயக்குனர் முருகதாசை கைது செய்ய நள்ளிரவில் விருகம்பாக்கத்தில் உள்ள முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் சென்றது, விஷயம் அறிந்த முருகதாஸ் போலீசார் வருவதற்குள் தப்பி ஓடிவிட்டார் என்ற தகவல் வெளியானது, மேலும்  இயக்குநர் முருகதாஸ் வீட்டுக்கு போலீசார் சென்ற தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பரப்பியது. ஆனால் காவல்துறை தரப்பில் முருகதாஸ்க்கு பாதுகாப்பு அளிக்க சென்றதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் சி வி சண்முகம் விஜய் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் வசனம் பேசியதாக கூறியிருந்தார், இதனை தொடர்ந்து நடிகர் விஜய் கைது செய்யப்படலாம் என்ற தகவலை தொடர்ந்து நேற்று தனது வீட்டில் இருந்து நடிகர் விஜய் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

விஜய் படத்திற்கு எதிராக பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அமைதிக்கு காரணம் விஜயின் உத்தரவு என்று சொல்லப்படுகிறது. எந்த இடத்திலும் அதிமுகவினருடன் மோதல் ஏற்பட கூடாது என்று விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உடனடியாக தகவல் சொல்லப்பட்டதுதான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சனைக்கு இடையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக சன்பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முருகதாஸ் தம்மை போலீஸ் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது பிற்பகலில் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

More News >>