சரோஜா தேவியாக நடிக்கப் போவது யார்?

என்டிஆர் பயோபிக் தெலுங்கில் இரண்டு பாகங்களாக உருவாகி வருகின்றன. இந்த படத்தில் சரோஜா தேவி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அனுஷ்காவை அணுகியுள்ளனர்.

 

முன்னாள் ஆந்திர முதல்வரும் தெலுங்கு சூப்பர்ஸ்டாருமான என்.டி. ராமராவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து என்.டி.ஆர் என்ற பெயரில் என்டிஆர் பயோபிக் படம் உருவாகி வருகிறது. இதில், என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார். சந்திரபாபு நாயுடுவாக ராணாவும், கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடிக்கின்றனர்.

 

இந்த படத்தில் என்.டி.ஆர் மனைவியாக வித்யா பாலன் நடித்து வருகிறார். சாவித்ரி கதாபாத்திரத்தில் நித்யா மேனனும், ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், அன்றைய காலக் கட்டத்தில் கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் கலக்கிய கேரளத்து பைங்கிளி சரோஜா தேவி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவை படக்குழு அணுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனுஷ்காவோ உடல் எடை குறைப்பதில் ஆர்வமாக உள்ளார். அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், யார் சரோஜா தேவியாக நடிக்கப்போவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

More News >>