மாரி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷின் மாரி 2 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி ரிலீசாகுக் என படக்குழு அறிவித்துள்ளது.

 

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படம் சரியாக போகவில்லை. ஆனால், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் முடிவு செய்தனர்.

 

தீபாவளியன்று மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இதனை தொடர்ந்து மாரி 2 படத்தின் நாயகி சாய் பல்லவியின் கேரக்டர் போஸ்டரான அராத்து ஆனந்தி போஸ்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. காளையாக நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார்.

 

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வரும் டிசம்பர் 21ம் தேதி மாரி 2 திரைக்கு வருகிறது. தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டாவின் ரிலீஸ் இதனால், ஜனவரிக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

 

 

More News >>