அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்த இந்தியா!

உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனை குறித்து கேனலிஸ் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது.

2018ம் ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான ஸ்மார்ட் போன் விற்பனை குறித்து கேனலிஸ் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கவை பின் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

சீனா பத்துக்கோடியே ஆறு லட்சம் ஸ்மார்ட்போன்களைச் சந்தைப்படுத்தி முதல் இடத்திலும், நான்கு கோடியே 4 லட்சம் போன்களை விற்று இரண்டாம் இடத்தில் இந்தியா இடம்பெற்றது.

நான்கு கோடி ஸ்மார்ட்போன்களை விற்று அமெரிக்கா மூன்றாமிடத்திக்குப் பின்னுக்கு சென்றுள்ளது.

இந்திய சந்தையில் ஸ்மாட்போன்கள் பெற்றுள்ள விழுக்காடு விபரம்

சாம்சங்= 20% ஹூவாய்= 15% ஆப்பிள்= 13.4% சியோமி= 9.6% ஒப்போ= 9%
More News >>