நகர்ப்புற மாவோயிஸ்டுகளை பாதுகாக்கும் காங்கிரஸ்- மோடி தாக்கு

நகர்ப்புற மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் பாதுகாத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

சத்தீஸ்கர் மாநிலத்தை மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்து விடுவிப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. இவர்கள்தான் ஏசி அறைகளில் வாழும் நகர்ப்புற மாவோயிஸ்டுகளை பாதுகாக்கிறார்கள்.

பஸ்தார் பிராந்திய மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பாடத்தைப் புகட்ட வேண்டும். இத்தனை ஆண்டுகாலமாக வளர்ச்சிப் பணிகளைப் பற்றி அக்கறை கொள்ளாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் உரை வீடியோ:

 

 

More News >>