யூடியூப் டிரெண்டிங்கில் காற்றின் மொழி டிரெய்லர் முதலிடம்!

ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் டிரெய்லர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

ராதாமோகன் இயக்கத்தில் மொழி படத்திற்கு பிறகு தற்போது ஜோதிகா நடித்துள்ள புதிய படம் காற்றின் மொழி. இப்படத்தில் ஜோதிகா தான் லீடு ரோல். ஜோதிகாவின் கணவராக வித்தார்த் நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சிம்பு சிறப்பு தோற்றத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

நேற்று வெளியான இப்படத்தின் டிரெய்லர் யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. சர்கார் படத்தின் விமர்சனங்கள் முதலிடத்தில் இருந்த நிலையில், ஜோதிகாவின் காற்றின் மொழி டிரெய்லர் முதலிடம் பிடித்துள்ளது.

டிரெய்லரின் இறுதியில் சிம்பு பேசும் வசனமும் தெறிக்கிறது. தும்ஹரி சுலு என்ற ஹிந்தி படத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். அந்த படத்தின் தமிழ் ரீமேக்காக காற்றின் மொழி உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

More News >>