மக்களை திசை திருப்பவே சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் - டிடிவி தினகரன்

ஆளுங்கட்சியின் தவறுகளை மறைத்து மக்களை திசை திருப்பவே சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

படம் வெளிவந்த பின்பும் சர்கார் பிரச்னை ஓய்ந்த பாடில்லை. தமிழகத்தில் காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் இன்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் மற்றும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், வெற்றிவேல், பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோர் சந்தித்தனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்,

சிறையில் சசிகலாவை சந்தித்து உடல் நலம் விசாரித்ததாக கூறினர். சர்கார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தினகரன் ஆளுங்கட்சியின் தவறுகளை மறைத்து மக்களை திசை திருப்பவே சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிமுகவினர் போராட்டம் என்ற பெயரில் சர்காருக்கு விளம்பரம் தேடித்தருவதாகவும் கூறினார்.

வசதி இல்லாதவர்களுக்கு பயன்படவே இலவச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அரசியல் ஆசையால் இது போல் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இதுவே ஜெயலலிதா இருக்கும் போது எடுத்திருந்தால் இவர்களை பாராட்டி இருக்கலாம் என்று கூறிய அவர் நடுநிலையில்லாத வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள படம் சர்கார் என்று சாடினார்.

 

More News >>