ஜெ. இயற்பெயர் கோமளவல்லியே- ஹைகோர்ட்டில் தமிழக அரசு!

சர்கார் குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், தனி மனித தாக்குதல், காழ்ப்புணர்ச்சி கருத்துகள் இன்றி படைப்பாளிகள் அரசியல் ரீதியான படம் எடுக்க வேண்டும்.

காழ்ப்புணர்ச்சியின்றி படம் எடுத்தால் கருத்து சுதந்திரம், சமூகம், திரைப்படத்துறைக்கு நன்மை பயக்கும் என ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சி சார்பில் சர்கார் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

அதில் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் எண்ணத்தில் சர்காரை உருவாக்கவில்லை என்றும். தணிக்கை சான்று தந்த பின் ஒரு படத்தில் காட்சிகளை ஆளுங்கட்சியினர் நீக்க சொல்வது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணையின் போது, ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லிதான் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று கருத்து தெரிவித்தனர்.மேலும் சர்கார் படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டனர்.  

More News >>