மோடிக்கு மக்கள் தண்டனை நிச்சயம் உண்டு- சிவசேனா சாபம்

பணமதிப்பிழப்பு செய்த மோடியை தண்டிக்க மக்கள் தயாராக உள்ளதாக சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயான்டே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிவசேனா மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய கட்சியாகும். மத்தியில் பாஜகவின் கூட்டணியில் உள்ள சிவசேனா பாஜக அரசு செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயான்டே தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மத்திய அரசு பண மதிப்பீடு இழப்பு செய்து 2 ஆண்டுகள் ஆன அந்த நடவடிக்கை ஒரு தோல்வியடைந்த திட்டம் என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், பணமதிப்பிழப்பு செய்வதால் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வது தடுக்கப்படும், கள்ள நோட்டுகள் ஒழியும் கருப்பு பணம் வெளியே கொண்டுவருவோம் என சொன்னதெல்லாம் கனவாகி போனது. இதில் ஒன்று கூட நடக்கவில்லை.

பணமதிப்பிழப்பு செய்ததன் மூலம் எவ்வளவு வேலைவாய்ப்புகள் பறிபோனது என்று அவர்கள் சொல்ல மறுக்கின்றனர். அதே வேளையில் வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது.

மேலும், பணமதிப்பிழப்பு செய்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் வரும் நாடளுமன்ற தேர்தல் மூலம் மோடியை தண்டிக்க காத்திருக்கின்றனர் என்றார்.

More News >>