ரஜினியின் 2.0 படத்தையும் ரிலீஸ் செய்வோம்: தமிழ் ராக்கர்ஸ் ட்வீட்
நடிகர் விஜய் நடித்த சர்ச்சைக்குரிய சர்கார் உள்ளிட்ட புதிய தமிழ்ப் படங்களை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.
தமிழ் ராக்கர்ஸின் இந்த சட்டவிரோத செயல் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறது. அண்மையில் சர்கார் படத்தை ரிலீஸ் நாளிலேயே இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.
தற்போது நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படத்தையும் இணையத்தில் ரிலீஸ் செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ் பெயரிலான ட்வீட். நவம்பர் 29-ந் தேதியன்று ரஜினியின் 2.0 ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.