பன்றிக் காய்ச்சல் எதிரொலி: கோவையில் அடுத்தடுத்து 2 பெண்கள் பலி!

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட இரு பெண்கள் அடுதடுத்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள பீளமேடு பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இங்கு உடல்நிலை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் காயத்ரி. இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து கயத்திரி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். தொடர்ந்து அருகில் சிகிச்சை பெற்று வந்த சூலூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவரும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவே உயிரிழந்தார்.

தொடர்ந்து, இரு பெண்கள் அடுதடுத்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>