ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய புயல் காற்று வீசுவதால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இதன் காரணமாக பாம்பன் பாலத்தில் ரயில்கள் பாதுகாப்பான முறையில் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களின் நலன் கருதி மீன் வளத்துறை அலுவலகத்தில் கடலுக்கு செல்லும் அனுமதி டோக்கன் இன்று வழங்கப்படவில்லை.
நகரை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், சூறாவளி காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.