திப்பு ஜெயந்தி - நாளை கர்நாடகாவில் 144 தடை உத்தரவு.
திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாக கர்நாடக மாநிலம் கொண்டாடுகிறது. இந்நிலையில் இந்த அரசு விழாவை கொண்டாட பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது. இதனால் கர்நாடக மாநிலம், குடகுவில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமலிருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தெற்கு பகுதி மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளை திப்பு சுல்தான் ஆண்டார். இதனால் அவருக்கு பெருமை செலுத்தும் வகையில் அவரது பிறந்த நாளை கர்நாடக மாநிலம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தனது ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான இந்துகளை கொடுமைப்படுத்தி, சித்தரவதை செய்து, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை, சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களை பெறும் நோக்கத்தில் கர்நாடக மாநில அரசு நடத்துவதாக சமீபகாலமாக எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பெங்களூரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், திப்பு ஜெயந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்களது முழுக்கங்களை எழுப்பினர்.
நாளை நடைப்பெறும் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்பதாக இருந்த முதல் மந்திரி குமாரசாமி அந்நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.