சுவையான பாசுமதி அரிசி கீர் செய்வது எப்படி?

வீட்டிலே கிடைக்கும் பொருட்களை வைத்து எப்படி இனியான பாசுமதி கீர் செய்வதென்று பார்ப்போம். இது மிகவும் சுலபமானது. குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.

தேவையானப் பொருட்கள்:

பால்  -  1 லிட்டர்

பாசுமதி அரிசி  -  1 சிட்டிகை

பாதாம் பருப்பு  -  100 கிராம்

சர்க்கரை  -  300 கிராம்

நெய்  -  4 டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு  -  10

செய்முறை:

முதலில் பாதாம் பருப்பை ஊறவைத்து அதன் தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

அதன்பின் பாசுமதி அரிசியை இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு நன்கு வறுத்து, இரண்டாக உடைத்து க் கொள்ள வேண்டும்.

குக்கரில் பாலை ஊற்றி, அதில் பொடித்த அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

பின் அதை வாணலியில் ஊற்றி ஏலக்காய்ப் பொடி, நறுக்கிய பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வேகவிடுங்கள்.

அரிசி வெந்து பால் சிறிது கெட்டியானவுடன் நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து இறக்குங்கள்.

சுவையான பாசுமதி அரிசி கீர் தயார்.

More News >>