எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க எளிய வழிகள்!

எப்பொழுதும் சோர்வாக இருப்பவரா நீங்கள் , எவ்வளவு நேரம் தூங்கினாலும் சோர்வாக உள்ளதா, பணிகளுக்கு மத்தியிலும் பகலிலேயே தூக்கம் வருகிறதா? இந்த சோர்விலிருந்து தப்பிக்க சில எளிய வழிகள்.

இந்த வழிகளை கடைப்பிடித்தால் போதும் நீங்கள் தேனீயைப் போல சுறுசுறூப்பாகிவிடலாம். வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம்

அதிகாலையில் சீக்கிரம் எழுவதற்கு பழகுங்கள், காலையில் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுங்கள். எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்யுங்கள், அது பிடிக்கவில்லை என்றால் சிறிது தூரம் நடந்து பாருங்கள் அது உங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும். மூளைக்கு ஏதாவது ஒரு சிறு வேலை காலையிலேயே தந்து பாருங்கள்: எழுதுவது, வரைவது என உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தால் காலையிலேயே மூளை சுறுசுறுப்பாகிவிடும். காலையில் எக்காரணம் கொண்டும் உணவை தவிர்க்கக்கூடாது, ஒரு நாளை நாம் தொடங்குவதற்கான சக்தியை காலை உணவுதான் நமக்கு தரும், அதனை ஆரோக்கியமானதாக சாப்பிடவேண்டும். உங்களை சுற்றியுள்ளவர்களிடம் கலகலப்பாக பழகினால் சேர்வு தெரியாது. உடல் சோர்வை போக்குவதற்கு தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும். ஆனால் நம்மில் பலர் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. தினமும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு விடுமுறையில் வீட்டில் ஓய்வெடுக்க உங்கள் உடலுக்கு தோன்றும் ஆனால் மனதிற்கு புத்துணர்ச்சி தேவை எனவே மாலை வரை வீட்டில் ஒய்வெடுத்துவிட்டு மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் மனதிற்கும் தெம்பு வந்துவிடும்.

 

More News >>